கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஓடும் காரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, நாகர்கோவில் கல்லூரியில் எம்.ஏ.2 ம் ஆண்டு படித்து வருகிறார். தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியை சேர்ந்த இவரது தோழி குமரி மத்திய மாவட்ட தவெக இளைஞரணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை அவரது தோழியும் தக்கலை அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது, தக்கலை அருகே உள்ள மருந்துக் கோட்டையை சேர்ந்த குமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள கிறிஸ்டோபர் காரில் வந்தார். ஏற்கனவே த.வெ.க. இளைஞரணி பெண் நிர்வாகியை தெரியும் என்பதால், அவரிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள். உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன் வாருங்கள் என கூறியதாக தெரிகிறது.
பெண் நிர்வாகிக்கு ஏற்கனவே கிறிஸ்டோபரை தெரியும் என்பதால், அவரும் தனது தோழியை வற்புறுத்தி காரில் ஏற செய்ததாகவும் முதலில் தவெக நிர்வாகியை மூலச்சல் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு, உடன் வந்த குலசேகரத்தை சேர்ந்த மாணவியிடம், நான் குலசேகரம் தான் செல்கிறேன் உங்களை அங்கு இறக்கி விடுகிறேன் என்று அழைத்து சென்றுள்ளார். இடையில் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நின்றதாக தெரிகிறது.
இதையும் படிங்க: சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

அப்போது உடன் வந்த கல்லூரி மாணவியிடம், கிறிஸ்டோபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கோபத்தில் அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து கிறிஸ்டோபர், அந்த மாணவியிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவருடைய வீடு அருகே இறக்கி விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை தன்னுடன் காரில் வந்த தவெக நிர்வாகியான தனது தனது தோழியிடம் சொல்லி, பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த, தவெக பெண் நிர்வாகி கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் உரிய முறை யில் வழக்கு பதிவு செய்யாமல் சமாதானமாக முடித்து வைக்கும் வகையில் பண பேரம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. சமூக வலை தளங்களில் வைரலானது. புகாரை தக்கலை போலீசார் விசாரிக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதைத்தொ டர்ந்து தக்கலை போலீசார் புகாரின் பேரில் பாலியல் இதையடுத்து இந்த விசாரணை நடத்தி, மாணவி தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க. நிர்வாகியான கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: போராடும் விவசாயிகளை ஒடுக்குவதா.? பிரச்சனை முடிஞ்சிடுமா CM.,? நயினார் கேள்வி..!!