தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதிலிருந்து திமுக ஆட்சியையும், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. விஜய், தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு இடைவிடை செய்தாலும், அவரது பேச்சுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஸ்டாலின் ஆட்சியின் பல துறைகளை இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறார்.
இந்த விமர்சனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தளத்தில் TVK-ஐ முதன்மை எதிர்க்கட்சியாக உயர்த்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன. ஸ்டாலினின் 'அப்பா' பிம்பத்தை சீண்டும் வகையில் ஸ்டாலின் அங்கிள் என்று அழைத்து விமர்சிக்கும் விஜய், ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறார்.

விஜயின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் ஏற்கனவே நிலவும் பன்முக அரசியல் போட்டியை மேலும் சூடாக்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக போன்ற பழைய கட்சிகளுக்கு இடையில் TVK, இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவைப் பெற முயல்கிறது. விஜய், தனது பேச்சுகளில் திமுக-பாஜக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகக் கூறி, ஸ்டாலினை மத்திய அரசுடன் இணைந்து விமர்சிக்கிறார்.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... விஜய் சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம்... தவெக தொண்டர்கள் உற்சாகம்...!
தமிழக அரசியல்வாதிகளில் முதல்முறையாக விஜய்க்கு ஒரு கோடியே 46 லட்சம் பேர் instagram-ல் பின் தொடர்பாளர்களாக உள்ளனர். இளைய சமுதாயத்திடம் விஜய்க்கு வரவேற்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் ஒன்றரை கோடி தொடும் நிலையில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாயே திறக்காத விஜய்... இப்போ வெட்டித்தனமா பேசுறாரு... திருமா அட்டாக்...!