பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவி ஏற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். முதல்வராகப் பதவியேற்ற நிலையில், தொடர்ந்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு 3 திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். தொடர்ந்து சட்டப்பேரவைக்குச் சென்று அலுவல் பணிகளையும் மேற்கொண்டார். சட்டப்பேரவை அதிகாரிகள், துறை செயலாளர்களை சந்தித்தார். அதனையடுத்து பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, 2026-ம் ஆண்டு தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், ஜார்ஜ் கோட்டை வளாகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. கடந்த 60 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் தலைமை ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தவெக தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! பரபரப்பான களம்..!
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்திய அரசியலமைப்பின் பால் இயற்றப்பட்ட சட்டவிதிகளை மதித்து செயல்படுவேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா எனக்கு வரிசையாக எம்எல்ஏக்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் Vs உதயநிதி: சட்டப்பேரவையில் விஜய்... முதலமைச்சராக பொறுப்பேற்றப் பின் முதல் விசிட்... எதிர் வரிசையில் உதயநிதி...!