இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி மொத்தம் 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 30 சதமும், 31 அரை சதமும் அடங்கும். இந்த நிலையில் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி ஓய்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்த அவரது பதிவில், தற்போது நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீங்கள் செய்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. உங்களுடைய மறைந்த தந்தை கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு நீங்கள் பரிசாக அளித்தீர்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் எதோ செய்துவிட்டது. நான் அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணலனா; நாங்க வரமாட்டோம்.. சொந்த ஊர்களுக்கு திரும்பும் வீரர்கள்!!

நீங்கள் அன்று காட்டிய அன்பு என் வாழ்நாளில் எப்போதுமே இருக்கும். ஆனால் தற்போது என்னிடம் உங்களுக்கு திருப்பி பரிசளிக்க எதுவும் இல்லை. ஆனால் உங்கள் மீது நான் எப்போதும் நல்ல அபிமானத்தையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கின்றேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நமது இளைஞர்கள் பலரை கிரிக்கெட் பக்கம் அழைத்து வந்திருக்கிறீர்கள். கிரிக்கெட்டை ஒரு தொழில் முறை விளையாட்டாக எடுத்துக் கொள்ள பலரும் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம்.

உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பல உச்சங்களை தொட்டு இருக்கின்றது. வெறும் ரன்களை மட்டும் அல்லாமல் அதற்கு மேல் பலவற்றையும் இந்த இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். பல புதிய தலைமுறையினரை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு சேரும். உங்களுடைய ஸ்பெஷலான இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்... கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் கனவை தகர்த்த சிஎஸ்கே!!