தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் இடம்பிடித்த நடிகை நந்திதா ஸ்வேதா, தற்போது தனது புதிய போட்டோஷூட் மூலம் இணையத்தை கலக்கும் நிலையில் உள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது டிரெண்டியான மற்றும் கிளாமர் தோற்றமுள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

நந்திதா, எப்போதும் மாடர்ன் உடைகளிலும், பாரம்பரிய உடைகளிலும் தன்னுடைய ஸ்டைலை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துபவர்.

இந்த முறை அவர் தேர்ந்தெடுத்துள்ள ஆடை மற்றும் தோற்றம், ரசிகர்களிடையே புதிய பேச்சாக மாறியுள்ளது.

நவீன டிசைன், மனதை கவரும் நிறங்கள், மற்றும் புகைப்படக்காரரின் கலைநயம் இணைந்து, இந்த போட்டோஷூட்டை மேலும் உயர்த்தியுள்ளது.

படங்களில் நந்திதா அணிந்திருந்த உடை, சமீப காலத்தில் இளைஞர்களிடையே டிரெண்டாகி வரும் ஸ்டைலிஷ் மாடர்ன் கலெக்ஷனில் ஒன்றாகும்.

அவர் அணிந்திருந்த ஆடையின் நிறம், அதற்கு பொருந்திய மேக்கப் மற்றும் ஹேர்-ஸ்டைல் அனைத்தும் ஒரே கோட்டில் அமைந்ததால், புகைப்படங்களில் அவர் மேலும் மிக அழகாக தெரிந்துள்ளார்.

நந்திதா வெளியிட்ட சில படங்கள், ரசிகர்களிடையே டிரெண்டாகி, சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பகிர்வுகளையும் பெற்றுவிட்டன.
இதையும் படிங்க: ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவை தொடர்ந்து..! கஞ்சா வழக்கில் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் அதிரடி கைது..!