• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மனோஜ் கடையில் முத்து - மீனா.. தனது புருஷனை காட்டிக்கொடுத்த கனகா..!! அப்செட்டில் விஜயா.. 'சிறகடிக்க ஆசையில்' இன்று..!

    'சிறகடிக்க ஆசையில்' இன்று பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
    Author By Bala Fri, 24 Jul 2026 11:28:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-today-tamilcinema

    விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல், குடும்ப உறவுகள், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய சஸ்பென்ஸ்களும், குடும்பத்தினருக்கிடையேயான மோதல்களும் கதையை மேலும் சுவாரஸ்யமாக மாற்றி வருகின்றன. குறிப்பாக முத்து–மீனா ஜோடியின் இயல்பான நடிப்பும், குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் இந்த தொடருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன.

    இன்றைய எபிசோடிலும் பல முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றன. குறிப்பாக மனோஜை சுற்றி நகரும் கதைக்களமும், அவரது ரகசியம் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன. அதேநேரத்தில், முத்து மற்றும் மீனா செய்த ஒரு செயல் ரேகாவை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எபிசோட் தொடக்கத்திலேயே, பலரும் தடுத்தும் தங்களது அறிவுரைகளை கூறியும் ரேகா தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் மீனாவுடன் செல்ல முடிவு செய்கிறார். இதைப் பார்த்த சிந்தாமணி, மகளின் எதிர்காலத்தை நினைத்து மனம் உடைந்து நிற்கிறார்.

    ஒரு தாயாக தனது மகள் சிரமப்படக் கூடாது என்ற அக்கறை அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது. ஆனால், ரேகா அதற்கு மாறாக மிகவும் தெளிவான மனநிலையுடன் இருக்கிறார். "நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். எனக்காக கவலைப்பட வேண்டாம்," என்று மீனாவிடம் கூறும் காட்சி, தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த உரையாடல் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருந்தது. இதையடுத்து கதை மனோஜ் பக்கம் நகர்கிறது. தனது கடையில் இருக்கும் மனோஜை சந்திக்க விஜயா வருகிறார். வக்கீலை நேரில் சந்தித்து பேசி வந்ததாக அவர் கூறுகிறார். அதன்பின் அவர் சொல்லும் தகவல் மனோஜை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

    இதையும் படிங்க: குழந்தை எப்போ பெத்துக்க போறீங்க.. அண்ணாமலை அட்வைஸ்..!! ரோகியின் கண்முன் கனகா.. ஷோரூமில் சிக்கிய மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    siragadikka aasai

    "இனி விவாகரத்து கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று வக்கீல் சொல்லிவிட்டார்," என்று விஜயா கூறியதும் மனோஜின் முகத்தில் பதற்றம் தெரிகிறது. எப்படியாவது இந்த விவாகரத்து நடக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவர் தொடர்ந்து பேசுகிறார். அப்போது விஜயா மிகவும் நேரடியான கேள்வியை முன்வைக்கிறார். "அந்த குழந்தைக்கு நீதான் அப்பாவா இல்லையா? வீட்டில் எல்லாரையும் ஏமாற்றியது போல என்னையும் ஏமாற்றாதே. உண்மையை மட்டும் சொல்," என்று அவர் கேட்க, மனோஜ் உடனடியாக, "சத்தியமாக நான் இல்லைம்மா... அவ பொய் சொல்றா," என்று மறுக்கிறார்.

    அதன்பின் விஜயா, "அப்படியானால் அவளிடம் பேசி, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து விவாகரத்து வாங்கிவிடலாம்," என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இந்த வார்த்தைகள் மனோஜின் பதற்றத்தை இன்னும் அதிகரிக்கின்றன. இனி உண்மை வெளியில் வந்தால் என்ன ஆகும் என்ற பயம் அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில், ரேகாவின் வாழ்க்கையை மனதில் வைத்துக் கொண்டு மீனா, ஸ்ருதியிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்கிறார்.

    "நீங்கள் வசதியான வீட்டில் வளர்ந்தவர். இங்கே வந்த பிறகு எப்படி இத்தனை எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொண்டீர்கள்?" என்று கேட்க, ஸ்ருதி மிகவும் அழகான பதிலை அளிக்கிறார். "நமக்கு பிடித்த மனிதருடன் வாழ்வதுதான் பெரிய சந்தோஷம். வசதிகள் பின்னாடி வந்தாலும் பரவாயில்லை. ஆனாலும் முடிந்த அளவுக்கு வாழ்க்கையை வசதியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார். இந்த உரையாடல், குடும்ப வாழ்க்கையில் புரிதல் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

    மறுநாள் காலை, ரேகாவுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முத்துவும் மீனாவும் சேர்ந்து ஏசி வாங்க முடிவு செய்கிறார்கள். அதற்காக அவர்கள் மனோஜின் கடைக்கு செல்கின்றனர். அங்கு எதிர்பாராத விதமாக கனகா இருப்பதை பார்த்த மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் திணறுகிறார். ஏனெனில், முத்துவும் மீனாவும் கனகாவை சந்தித்தால் உண்மை வெளிவந்துவிடுமோ என்ற அச்சம் அவரை ஆட்கொள்கிறது.

    siragadikka aasai

    முத்துவும் மீனாவும் கனகாவிடம் நலம் விசாரித்து பேசுகிறார்கள். அப்போது கனகா, "நான் தனியாக வரவில்லை. என் கணவரும் இங்குதான் இருக்கிறார்," என்று கூறுகிறார். இதைக் கேட்ட முத்து, "எங்கே இருக்கிறார்?" என்று கேட்க, கனகா மனோஜை நோக்கி கை காட்டுகிறார். அந்த ஒரு நொடியில் முத்து மற்றும் மீனா இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள். சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கும் மனோஜ், வழக்கம் போல தன்னுடைய தப்பை மறைக்க இன்னொரு பொய்யைச் சொல்கிறார்.

    உடனே அருகில் இருந்த ஜோதிடர் சக்திவேலைக் காட்டி, "அவர்தான் கனகாவின் கணவர்," என்று சமாளிக்கிறார். இதனால் முத்து, மீனா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கனகாவின் கணவர் ஜோதிடர் சக்திவேல்தான் என்று நம்பிவிடுகின்றனர். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்யை மனோஜ் சொல்வது வழக்கமாகிவிட்ட நிலையில், இந்த புதிய பொய் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது மனோஜ் சொல்லியுள்ள இந்த பொய்யால் பிரச்சினை தற்காலிகமாக சமாளிக்கப்பட்டாலும், உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வருவது உறுதி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

    அப்போது குடும்பத்தினர் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இதையடுத்து முத்துவும் மீனாவும் வாங்கிய ஏசியை எடுத்துக்கொண்டு சத்யாவின் வீட்டிற்கு செல்கின்றனர். தன்னைக் கருத்தில் கொண்டு இவ்வளவு பெரிய விஷயத்தை அவர்கள் செய்திருப்பதை பார்த்த ரேகா மகிழ்ச்சியில் வார்த்தைகள் வராமல் நிற்கிறார். அவரது கண்களில் தெரியும் நன்றியுணர்வு அந்த காட்சிக்கு கூடுதல் உணர்ச்சியை சேர்க்கிறது.

    siragadikka aasai

    இதையெல்லாம் அருகில் இருந்து கவனிக்கும் சந்திராவும், முத்து மற்றும் மீனாவின் பாசத்தை நினைத்து மனம் மகிழ்கிறார். குடும்ப உறவுகள் என்பது அன்பாலும் அக்கறையாலும் மட்டுமே நிலைக்கும் என்பதை இந்த காட்சி அழகாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு, ஒரு பக்கம் மனோஜின் பொய்கள் இன்னும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் முத்து–மீனாவின் மனிதநேயம் மற்றும் பாசம் ரசிகர்களின் மனதை வென்றது. உண்மை எப்போது வெளிவரும், மனோஜின் ரகசியம் குடும்பத்தினருக்கு எப்படித் தெரியவரும், அதன்பிறகு கதையில் என்ன திருப்பம் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

    இதையும் படிங்க: இரண்டாவது திருமணத்திற்கு மும்முரமாக ரெடியான மனோஜ்..!! ஸ்பார்ட்டில் இறங்கிய முத்து - சிறகடிக்க ஆசையில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    இந்தியா
    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    கிரிக்கெட்
    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    இந்தியா
    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    கிரிக்கெட்

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share