தஞ்சாவூரில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு இன்று பிரமாண்டமாகத் தொடங்கியுள்ளது. "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, திராவிட மாடலின் பெண் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னிலைப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் அணியினரின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப்பட்டி பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு சுமார் 1.5 லட்சம் வரை பெண்கள் கருப்பு-சிவப்பு சீருடையில் திரண்டு வந்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த 15 மாவட்டங்கள் மற்றும் 46 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து பெருந்திரளான மகளிர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டுத் திடல் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தயாராகியுள்ளது.மாநாடு மாலை 4 மணியளவில் தொடங்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமை தாங்குகிறார். கழக முதன்மைச் செயலாளரும், டெல்டா மண்டலப் பொறுப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார்.
இதையும் படிங்க: விஜயை மிரட்டும் அவசியம் பாஜகவுக்கு இல்லை..! திமுகவுக்கு பயம்..! நயினார் நாகேந்திரன் விளாசல்..!
மாநாட்டின் சிறப்பம்சமாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதல்வருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறந்த வாகனத்தில் கைகளை அசைத்தவாறு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். திமுக கட்சிக் கொடியை அசைத்தவாறு பெண்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: அவ்வளவு என்ன மெத்தனம்? காலி பணியிடங்களை குறிப்பிட கூட நேரமில்லையா? நயினார் சரமாரி கேள்வி..!