கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணம் நானா.திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் சதீஷன் எதிர்கட்சியினருக்கு நகைச்சுவையாக பதிலடி.
கேரளா மாநில முதலமைச்சர் சதீசன் கழிந்த 26 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் அடுத்த நாள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு எர்ணாகுளத்தில் உள்ள அவரது மகள் வீடு உள்ளிட்ட அவர்களுக்கு தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது
அமலாக்கத்துறை சோதனைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சோதனை முடிந்து திரும்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனத்தையும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் சதீசன் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வந்தனர்
இதையும் படிங்க: மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!
இந்நிலையில் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சதீசன், இந்த அரசாங்கம் வந்த பிறகு நடக்கும் இரண்டாவது நகைச்சுவை இது என்றும் கேரள முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களைச் சந்திப்பது ஒரு மரியாதை நிமித்தமான வழக்கமாகும்.
அதேபோலத்தான் பிரதமர் மோடியை நேரில் சந்தித்ததாகவும் இந்தச் சந்திப்பின் போது பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், அதற்குப் பிரதமர் மோடி உடனடியாக தொலைபேசி மூலம் உத்தரவிட்டு, கேரளாவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் முன்னாள்w அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் கூறி வருகின்றனர்.
இதை கேட்டு நான் சிரிக்கவா, அழவா? நீங்கள் யோசித்துப் பாருங்கள், நரேந்திர மோடியை முதன்முறையாகப் பார்க்கப் போகும் போது, இங்கிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டைச் சோதனை செய்யச் சொன்னதாகச் சொல்கிறார்கள். பினராயி விஜயன் அப்படிச் சொல்ல மாட்டார், அவரைப் பற்றி எனக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் இப்போது நகைச்சுவை பேசத் தொடங்கியுள்ளனர், அதில் எனக்கு சந்தோஷம். என்ன நடக்கிறது கேரளாவில்? என்றும் முன்னாள் அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு நகைச்சுவையாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!