மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, மின் கட்டண உயர்வு குறித்தும் மின்சார தடை குறித்து தொடர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்ப்பை தெரிவிக்கலாம் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முழுவதும் மின்வெட்டு உள்ளது, மின் கட்டண உயர்வு ஒரு புறம் மேலும் ஒரு யூனிட் வெளியில் இருந்து 30 ரூபாய்க்கு வாங்கினால் நிச்சயம் மக்களை பாதிக்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலில் தவெக நிர்வாகி கைது குறித்த கேள்விக்கு, அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் தேமுதிகவை பொறுத்த அளவில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் கேப்டனின் கனவு எங்களுடைய கனவும் அதுதான் என்றார்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!
பிரதமரை முதல்வர் சந்தித்தபோது காவிரி விவகாரம் குறித்து பேசவில்லை என எடப்பாடி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஏன் பேசவில்லை என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நிச்சயமாக தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து பேசுவதும், ஒகேனக்கல் சென்று ஆர்ப்பாட்டம் செய்தது தேமுதிக தான். அரசுதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும், முழு பொறுப்பும் அவர்கள்தான் எனக்கூறினார்.
அதிமுக MLAக்கள் குதிரை பேரம் குறித்த கேள்விக்கு, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என கேப்டன் சொல்வார். வாழ்க்கை ஒரு வட்டம் நிச்சயமாக நாம் விதை விதைத்தால் விதை அறுப்போம் வினை விதைத்தால் வினை அறுப்போம்.
குதிரை பேரத்தை சட்டசபை குறித்து முதலில் பேசியதை நான் தான். வெட்ட வெளிச்சமாக தெரிகிற ஒரு விஷயம் இது தடுக்கப்பட வேண்டும் நிச்சயமாக நல்ல உதாரணம் இல்லை என்றார்.
53 ஆம் ஆண்டில் அதிமுக அடி எடுத்து வைப்பது குறித்த கேள்விக்கு, வாழ்த்துக்கள் என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
ஜெம் வீரமணி வழக்கு குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது என நினைக்கும் போது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. யார் தப்பு செய்தாலும் தண்டனைக்கு உரியவர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனக்கூறினார்.
விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு, எல்லா விலைகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ அரிசி ரூ.100 ஆகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்கிறது. அரசாங்கம் இதை தடுக்க வேண்டும். ஏழை மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி தான் எல்லா இடத்திலும் பட்டப் பகலில் படுகொலைகள் பாலியல் வன்கொடுமைகள் தமிழக முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி தான் காவல்துறையை முதல்வர் தன் கையில் வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு மானிய கோரிக்கையிலும் இந்த அரசு கவனத்திற்கு கொண்டு சென்றோம் ஆனால் முடிவு ஒன்றுமில்லையே. சர்க்காரியா கமிஷனுக்கு சென்று விட்டார்கள். மானிய கோரிக்கையில் பேசியதற்கு பதிலோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை. ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தான் இதை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
2 இடைத்தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் ஜெயிப்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. அனைத்து கட்சியினரும் அவர்கள் கட்சி வேட்பாளர்களுக்காக நேர்மையாக உழைத்தார்கள். ஆனால் மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு என்றார்.
முதல்வரை காண கோவையில் மழையில் மக்கள் கூடுவது குறித்த கேள்விக்கு, மக்கள் கூட்டத்தைப் பற்றி எங்களிடம் நீங்கள் கேட்கவே கூடாது நாற்பதாண்டுகளாக கேப்டன் கூடவே இருந்து பழகிவிட்டோம் இதே மதுரையில் தான் மாநாடு நடத்தி உலக சரித்திரம் படைத்தார். இதே மதுரையில் தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. ஒரு வரலாறு கேப்டன் மறைவு ஒரு வரலாறு மக்கள் கூட்டத்தைப் பற்றி தேமுதிகவிடம் கேட்காதீர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டது என்றார்.
இதையும் படிங்க: 2,500 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்: 3 வாரங்களில் அரசாணை என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!