தமிழ்நாட்டின் அரசியல் களம் இன்று பரபரப்பான நிலையில் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் , முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த ஆட்சியின் மீது எழும் விமர்சனங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் இழுபறி ஆகியவை போன்றவை, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தூண்டியுள்ளன.
இதன் விளைவாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பட்டாளி மக்கள் கட்சி (பாமக) உள்ளிட்ட கட்சிகள், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று ஒருமித்த குரலை எழுப்பி வருகின்றன. குறிப்பாக, காவல் துறையினரால் நடத்தப்படும் காவல் மோதல்கள், போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டுகள், மத்திய அரசுடனான நிதி உதவி தாமதங்கள் ஆகியவை, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதிமுக, தனது பழைய தலைமை மரபை மீட்டெடுக்கும் முயற்சியில், திமுக ஆட்சியை அகற்றுவதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. பாஜக, தமிழகத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்தும் முயற்சியில், திமுக ஆட்சியை அகற்றுவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. பாமக, வட தமிழகத்தில் தனது வன் பலத்தைப் பயன்படுத்தி, திமுக ஆட்சியை விமர்சிக்கிறது. இவ்வாறு திமுக ஆட்சியை ஒருங்கிணைந்து எதிர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக எனும் பாம்பு அதிமுகவை விழுங்குது... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் விமர்சனம்
தவெக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுகவே எதிராக இருக்கிறதே என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசினார். காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி வீசப்படும் கணைகள் அத்தனையும் 2026ல் பொய்த்துவிடும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆஹா செம்ம-ல... “CHENNAI ONE”... அனைத்து பொது போக்குவரத்தும் ஒரே APP- ல்… மக்களிடம் கூடும் மவுசு...!