சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் கிடந்த தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியாகிய சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் சுமதி தம்பதியினர். சுமதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆவார். இவருக்கு மகில்மித்திரன் என்ற 4 வயது மகன் இருந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் என்பவரின் மகன் வர்ஷன் 4 வயது சிறுவன், இவர்களின் வீட்டின் முன்பு புதிதாக வீடு ஒன்று கட்டுவதற்காக பில்லர் குழி தோண்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பெய்த மழையால் அந்த பில்லர் குழி முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இதனிடையே இரு சிறுவர்களும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு சிறுவர்களும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை காணவில்லை என இருவர் பெற்றோர்களும் அங்கும் இங்கும் தேட கடைசியில் பில்லர் குழிக்குள் 2 சிறுவர்களும் மூழ்கிக் கிடந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: வந்தாச்சு எலெக்ஷன்..! கேரளம், அசாம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு..!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த சிறுவர்களை தூக்கிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அப்பொழுது இரு சிறுவர்களையும் பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து காரையூர் கிராமமே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து, குழந்தைகளின் உடலைக் கண்டு கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவை DIVORCE பண்ணனும்...! அதிமுக வேட்பாளரை ஆதரித்து ரவிமரியா வாக்குச் சேகரிப்பு..!