தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் புதிய படம் “இட்லி கடை”. உணர்வுப்பூர்வமான கதையைக் கொண்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் திரை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசினவர் தனுஷின் நெருங்கிய தோழரும், மேனேஜரும் ஆகிய ஸ்ரேயாஸ். அவருடைய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி ஸ்ரேயாஸ் மேடையில் பேசுகையில் “பேமஸ் ஆக ரெண்டு வழி இருக்கு... ஒன்னு – ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி டாப்ல போய் உக்கார்றது. ரெண்டாவது – டாப்ல இருக்கரவனை அடிக்குறது. உங்களை வெச்சி கிராஸ் பண்ணவங்க, உங்களால வளந்தவங்க, நீங்கள் வாழ்க்கை குடுத்தவங்க... நேருக்கு நேர் நடிச்சு மோதுனா ஓகே. ஆனா, ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி உக்காந்து பேசுறது...? அது ஹீரோவா?” என்றார். இந்தக் வார்த்தையை கேட்டவுடன் அரங்கத்தில் இருந்த தனுஷ் ரசிகர்கள் சில நிமிடங்கள் கை தட்டி, குரல் கொடுத்து ஆரவாரம் செய்தனர்.
ஸ்ரேயாஸ் கூறிய இந்த வார்த்தைகள், தனுஷின் முந்தைய படம் "குபேரா" குறித்த சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விமர்சனங்களுக்கும் மீம்களுக்கும் எதிராகவே இடம்பெற்றதாக பலரும் கருதுகிறார்கள். "குபேரா" திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வசூலிலும், விமர்சனங்களிலும் வெற்றி பெறவில்லை. மேலும், அந்தப் படத்தை டிஜிட்டல் மீடியா ப்லாட்ஃபாம்களில், யூடியூப் சேனல்களில், மீம்களாக பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விழாவில் மேனேஜர் ஸ்ரேயாஸ் நேரடியாக சிலரை குறிவைத்து பேசியிருக்கிறார் என்பது போன்ற மதிப்பீடுகள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளன. ஸ்ரேயாஸ் பேச்சிற்குப் பிறகு, இணையத்தில் ஒரு தீவிரமான விவாதம் கிளம்பியுள்ளது.

அதில் சிலர் கூறுவது என்னவெனில், “இது ஒருவர் மேல் நேரடி தாக்குதல் போலவே இருக்கிறது. தனுஷ் படங்களின் ஆரம்ப வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒரு முன்னணி நடிகரையே குறிவைத்து சொன்னதாக தோன்றுகிறது.” என்கின்றனர். இப்போதெல்லாம் திரையுலகில் பல நடிகர்கள் ஒருவரையொருவர் வெளியே பாராட்டினாலும், உள்ளுக்குள் போட்டி நிச்சயம் இருக்கிறது. அதில் சில நேரங்களில், அப்படியே வெளிவந்து விடுகிறது என்பதே பலரின் கருத்து. இந்நிலையில், மேடையில் ஸ்ரேயாஸ் பேசும்போது தனுஷ் அமைதியாக, ஒரு சிறிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த பேச்சுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதைப் பொறுத்து, இந்த விவகாரம் மேலும் விரிவாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் யுதன் பாலாஜி நினைவிருக்கா..! சுட்டி பையனாக வந்தவர் இன்று கல்யாண கோலத்தில்..!
தனுஷ் தனது பேச்சில், “இட்லி கடை எனும் படம் என் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான ஒன்று. என் குழந்தைப் பருவத்தின் நினைவுகளால் உருவானது” என்று கூறினார். ஆனால் மேனேஜர் பேச்சைப் பற்றி அவர் எந்த பதிலும் வழங்கவில்லை. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். படத்திற்கு இசையமைத்துள்ளார். வெளியிடப்பட்ட பாடல்களான – “அந்த கால இட்லி”, “வயலின் வாசலில்”, மற்றும் “சத்தம் இல்லாத சப்தம்” – இணையத்தில் மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். குறிப்பாக சாயி பல்லவி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் மேடையில் கலந்துகொண்டனர். ஆகவே “இட்லி கடை” இசை வெளியீட்டு விழா, ஒரு திரைப்பட நிகழ்வைத் தாண்டி, திரையுலக அரசியல், நடிகர்களுக்குள் உள்ள போட்டிகள் மற்றும் பதிலடிகள் ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் காணப்பட்டது.

தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேச்சு – ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்ததா அல்லது ஒரு தீய விவாதத்துக்கு தூணாக மாறியதா என்பது, அவர் குறிவைத்த நபர் அல்லது தனுஷ் தரப்பில் எதிர்வரும் அதிகாரப்பூர்வ பதில்கள் மூலம் தான் தெளிவாகும்.
இதையும் படிங்க: ஹேட்டர்ஸா.. எனக்கா.. நெவர்..! நடிகர் தனுஷ் கொடுத்த 'தக்' ரிப்ளை.. மெய்மறந்து ரசித்த ரசிகர்கள்..!