பிரதீப் ரங்கநாதனை பார்த்தால் சிறிய பையன் போல் தான் இருக்கும். ஆனால் படம் எழுதுவதிலும் இயக்குவதிலும் நடிப்பிலும் கைதேர்ந்தவர். பிரதீப் இயக்கிய முதல் படமான கோமாளியில், மனித நேயத்தை மையாக வைத்து ஒரு கலக்கல் காமெடி திரைப்படமாக இயக்கி சிறந்த இயக்குநராக அறிமுகமானார். அதன் பின் காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை கூறும் "லவ் டுடே" படத்தை இயக்கியதோடு அதில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் படையையே உருவாக்கி இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, கல்லூரி படிக்கும் பொழுது தனது சீனியர் "பார்க்க தான் ஒரு மாதிரி இருக்க ஆனா கேமராவில் பார்க்க நன்றாக இருக்க" என்று சொன்னதையே வீடியோவாக ரீகிரியேட் செய்து "ட்ரேகன்" படத்திற்கு ப்ரமோஷன் செய்தார். அதன்பின் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பிப்ரவரி 21ம் தேதி இப்படம் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது.
இதையும் படிங்க: நடிகர் சூரியை அழவைத்த மாணவர்கள்...! ஆறுதல் கூறி அழைத்து சென்ற நடிகை ஐஸ்வர்யா..!

இந்த படத்தின் ஃப்ரமோஷன் விழாவில் பேசிய பிரதீப், டிராகன் படத்தை முதலில் கேட்டபொழுது நன்றாக உள்ளது என சொன்ன பல ஹீரோயின்கள் நான் ஹீரோ என்றதும் வேண்டாம் என சொல்லி சென்றுவிட்டனர். அப்படி வெளிப்படையாக சொல்லி சென்ற ஹீரோயின்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும் நான் ப்ரேமம் படம் பார்த்த பொழுது அனுபமா பரமேஸ்வரனை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன். ஆனால் அவருடன் நடிப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த ட்ராகன் படம் பலபேரினுடைய வாழ்க்கையை மாற்றி உள்ளது என்றே சொல்லமாம், இப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்து, வேல்ஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகை கயாடு லோஹருக்கும் படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர்களை தொடர்ந்து படத்தின் கதாநாயகனான பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் நடித்து அதற்குண்டான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிரூத் இசையமைப்பில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகிய இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படி அனைவரையும் வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் "லீக்". இப்படத்திற்கான போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான "தீமா தீமா" பாடலும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் ஒரு அப்டேட்டை படக்குழுவினர் தற்பொழுது கொடுத்துள்ளனர். அதன்படி, வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி "லீக்" திரைப்படம் வெளியாகும் என்ற இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அக்டோபர் மாதம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள "ட்யூட்" திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகனுக்காக தாய்ப்பாலில் தங்க நகை செய்த இந்திரஜா சங்கர்..! ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்..!