ஜாக்கிசானின் 'கராத்தே கிட்' திரைப்படம் குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 2010ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இயக்குனர் ஹரால்ட் ஸ்வார்ட் இயக்கத்தில், ஜாக்கிஜான், ஜேடன் ஸ்மித், தாரா ஜி.பி ஜின்சன் ஆகியோரின் நடிப்பில் வெளியானது. குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மகனுடன் சீனாவில் குடி பெயர்ந்த தாய் மகன் பற்றிய கதையாக இப்படம் பார்க்கப்பட்டது.

அந்த இடத்தில் கராத்தே தெரிந்த மாணவர்களால் அச்சிறுவன் பல துயரங்களை சந்தித்துக் கொண்டிருந்த பொழுது ஜாக்கிஜானிடம் கராத்தே கற்றுக் கொள்வதற்காக வருவார். பின்பு பல போராட்டத்திற்குப் பிறகு ஜாக்கிசானின் மனதை மாற்றி அவரிடம் கராத்தேவை கற்றுக் கொண்டு பல இடர்பாடுகளின் மத்தியில் சண்டைகளை கற்றுக்கொண்டு கராத்தையிலும் ஜெயித்திருப்பார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படத்தைப் போல மீண்டும் ஒரு படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: கன்னட மொழிக்கு எதிரானவரா கமல்..? அவதூறு பரப்புவதா.? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்!!

இப்படி 2010ம் ஆண்டு வெளியான 'தி கராத்தே கிட்' திரைப்படமே இவ்வளவு அருமையாக இருக்கிறது என்றால் 1984, 1986, 1989 ஆகிய வருடங்களில் வெளியான 'தி கராத்தே கிட்' திரைப்படத்தில் பிரபல நடிகர் ரால்ஃப் மாட்சியோடு ஜாக்கிஜானும் இணைந்து எப்படி நடித்திருப்பார். அப்படியானால் அத்தனை படங்களும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்படி இருக்க, தற்பொழுது மீண்டும் ஜாக்கிசானின் 'கராத்தே கிட் லெஜென்ஸ்' திரைப்படம் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படத்தின் கதை என பார்த்தால், கதையின் ஆரம்பத்திலிருந்து ஜாக்கிஜான் குங்ஃபூ சண்டை பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இப்படி இருக்க இதற்கு முன்பாக வெளிவந்த 'தி கராத்தே கிட்' நடிகரான ரால்ஃப் மாச்சியோ குடும்பத்துக்கும் ஜாக்கிஜானுக்கும் உள்ள கனெக்ஷன் குறித்து அழகாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். மேலும், இப்படத்தில் இவர்கள் இருவரை தவிர ஒருவர் மட்டுமே ஹைலைட்டாக காட்டப்பட்டு இருக்கிறார் என்றால் அவர் தான் நாயகன் 'பென் வாங்கின்'.

நம் தமிழ் சினிமாவை போலவே இத்திரைப்படமும் அமைந்திருக்கிறது என்றால் ஆச்சரியம் தான். காரணம் என்னவெனில் வழக்கம் போல வேலை காரணமாக தாயும் மகனும் சீனாவிற்கு குடியேறுகிறார்கள். அங்கு இருக்கும் பெண்ணை பார்த்து ஹீரோவுக்கும் காதல் மலர்கிறது. இந்த விஷயம் வில்லனுக்குத் தெரிய வர, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஹீரோ ஜாக்கிஜானிடம் சென்று கராத்தே கற்றுக்கொண்டு கடைசியில் அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதை கதையாக வைத்திருக்கின்றனர்.

மேலும் படத்தைக் குறித்து பார்த்தால் வயதான தோற்றத்தில் ஜாக்கிஜான் வந்திருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் அவரை அழகாக கொண்டு சென்றிருக்கிறது என்றே சொல்லலாம். எப்படி நடிகர் சங்கரின் படத்தில் பிரம்மாண்டம் இருக்கிறதோ... அதேபோல் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் பிரம்மாண்டத்தில் துளி கூட பாரபட்சம் காண்பிக்கவில்லை. மேலும் இப்படத்தில் ஜாக்கிஜானுக்கும் ரால்ஃப் மாச்சியோ ஆகிய இருவருக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் ஹீரோவுக்கு பாரபட்சமே இல்லாம சண்டை காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.

மேலும் 2010ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட் படத்தைப் போன்ற பழைய எமோஷனல் காட்சிகளை வைக்க நினைத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அது இந்த படத்தில் ஒர்கவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம். ஆயினும் படத்தைப் பார்க்க நன்றாக உள்ளது என பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யா - ஜோதிகா மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர்! போட்டோஸ்