கடந்த மே மாதம் பல படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் மாமன் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்தது. அதே போல் தற்பொழுது நடிகர் தனுஷின் குபேரா படமும் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் ஜூன் 27ம் தேதியான நாளை ஐந்து படங்கள் ஒரே நேரங்களில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதை பார்ப்பது என குழப்பத்தில் உள்ளனர்.

கண்ணப்பா - அதன்படி, முதலாவதாக அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகம் பெற்ற "கண்ணப்பா" படம் நாளை வெளியாகிறது. ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கண்ணப்பா. இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: மிரட்டலாக அட்டகாசமாக வெளியானது கண்ணப்பா படத்தின் மேக்கிங் வீடியோ..! இணையத்தில் வைரல்..!

மார்கன் - மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்து தற்பொழுது இயக்குனராக மாறி இருக்கும் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்ட இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதியான நாளை வெளியாக உள்ளது.

லவ் மேரேஜ் - அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்ட்மண்ட்டாக உருவாகியுள்ள திரைப்படம் தான் "லவ் மேரேஜ்". திரைப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகையாக சுஷ்மிதா பட், மீதமுள்ள காட்சிகளில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

மா - அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரிப்பில் இயக்குனர் விஷால் பியூரியா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பில் உருவாகி உள்ள ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "மா". பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இப்படமும் நாளை வெளியாக உள்ளது. இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

மேகன் 2.0 - ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோவை மையமாக கொண்டு இயக்குனர் ஜெரார்ட் ஜான்ஸ்டோன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் தான் "மேகன் 2.0". இந்த படத்தில் இந்த படத்தில் அலிசன் வில்லியம்ஸ், வயலட் மெக்ரா, இவானா சக்னோ மற்றும் ஜெமைன் கிளெமென்ட் ஆகியோர் நடிப்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

எப் 1 தி மூவி - பார்முலா கார் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அதிரடி காட்சிகள் நிறைந்த திரைப்படம் தான் இந்த "எப் 1 தி மூவி". ஜோசப் கோசின்ஸ்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிராட் பிட்டும், துணை கதாபாத்திரங்களில் டாம்சன் இட்ரிஸ், கெர்ரி காண்டன், டோபியாஸ் மென்ஸீஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

இதனை பார்த்த பல சினிமா ரசிகர்கள் நாளை எந்த படத்தை காண்பது என குழப்பத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து தடங்கலாகும் கண்ணப்பா பட ட்ரைலர் நிகழ்ச்சி.. முதலில் ஹார்ட் டிஸ்க் இப்ப விமான விபத்து.. அடுத்து என்னவோ...!