இன்று பல படங்களில் நாயகியாக கலக்கி வரும் சாய்பல்லவி, ஒரு காலத்தில் நடன கலைஞர் தான். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடைய இவர், தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். இதனை அடுத்து தனது முழு திறமையையும் வெளிக்காட்ட நினைத்த சாய்பல்லவி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன போட்டியில் பங்கேற்று தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார்.

அடிப்படையில் மருத்துவரான சாய் பல்லவி, நடன நிகழ்ச்சிக்கு பிறகு "பிரேமம்" இயக்குனரின் கண்களில் பட, அப்பிடத்தில் மலர் டீச்சர் ஆக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதுவரை சாய்பல்லவி என்று இருந்த பெயரை மலர் டீச்சர் என மாற்றி ரசிகர்கள் பித்து பிடித்து அலைந்தனர். இதனை அடுத்து, பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் நடித்து தற்பொழுது "பான் இந்தியா" நடிகையாக தனக்கென அந்தஸ்தை பெற்றுள்ளார். தற்பொழுது உள்ள நடிகைகள் "லேடி சூப்பர் ஸ்டார்" யார்..? என அடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், தனக்கான ஜாக்பாட் அடித்து விட்டது என "தனி சூப்பர் ஸ்டாராக" வலம் வருகிறார் சாய் பல்லவி.
இதையும் படிங்க: சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

இந்த சூழலில், அவர் நடித்த அமரன் திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டு நடிகை சாய்பல்லவியின் தங்கையான பூஜாவுக்கும், வினித் என்பவருக்கும் கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி திருமணம் நடந்தது. இதனை முன்னின்று நடத்தி வைத்த, சாய்பல்லவி திருமணத்தில் வந்தவர்களோடு சேர்ந்து ஆடிய நடனம் அப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக மாறியது. கடந்த 2024 ஆம் ஆண்டு வரை தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக மட்டுமே வைத்திருந்த நடிகை சாய்பல்லவி, 'அமரன்' படத்திற்குப் பின்பு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்த சாய்பல்லவி, தற்பொழுது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அவர் சம்பளமாக ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்று இருப்பதால் அதிக சம்பளம் வாக்கும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்து இருக்கிறார் சாய் பல்லவி.

இந்த நிலையில், நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டும் இசையில், நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சாய்ப்பல்லவி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் தான் "ராமாயணம்" புராணங்களில் சொல்லப்பட்ட ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக நடிகர் யாஷும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் கும்பகர்ணனாக பாபிதியோல், அனுமானாக சன்னி தியோல், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனாவும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் ராமாயணத்தின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் எடிட்டிங் எல்லாம் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினாரால் கூறப்படுகிறது.

மேலும், தற்பொழுது மும்பையில் படமாக்கப்பட்டு வரும் ராமாயணம் இரண்டாம் பாகத்திலும் நடிகை சாய் பல்லவி களம் இறங்கி நடித்து வருகிறார். இப்பொழுது நடித்து வரும் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். அடுத்த இரண்டு வருட தீபாவளி இராமாயணம் கொண்டாட்டத்தில் இருக்க போகிறது.இப்படி இருக்க ரூ. 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் கிலிம்ப்ஸ் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

இந்த சூழலில், இராமாயணம் படத்தை குறித்தும் அதன் டீசர் 6மில்லியனுக்கும் அதிகமாக சென்றதை குறித்தும் சீதாவாக நடித்துள்ள சாய்ப்பல்லவி தனது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். அதன்படி அவரது பதிவில், " சீதா மாதாவின் ஆசீர்வாதத்துடன், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடிகளுடன் சேர்ந்து, இந்த காவியத்தை மீண்டும் உருவாக்க, அவரது பயணத்தை நான் அனுபவிக்கிறேன். இது போன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.2000 கோடி சொத்து.. கார் வேண்டாம் பஸ்ஸே போதும்.. பிரபல நடிகர் மகனின் வாழ்க்கை..! வியப்பில் நெட்டிசன்கள்.!