தமிழ் திரையுலகில் அனைவரும் அறிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது முதல் சினிமா பயணத்தை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அசத்தப்போவது யாரு" என்ற பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் மற்றொரு தொலைக்காட்சியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இப்படி தொலைக்காட்சிகளில் தனது பயணத்தை ஆரம்பித்த இவருக்கு, 2010ம் ஆண்டு "நீதானா அவன்" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்திய ஐஸ்வர்யா, அப்படத்தில் நடித்ததில் தமிழ் திரையுலகில் அடுத்த பயணத்தை ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: வேலுநாச்சியார் போஸ்டரை வெளியிட என்ன தகுதி உள்ளது உங்களுக்கு..? ஸ்ருதி நாராயணனை அழ வைத்த பத்திரிகையாளர்..!

இதனை தொடர்ந்து, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம்,திருடன் போலீஸ்,காக்கா முட்டை,ஹலோ நான் பேய் பேசுறேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சாமி 2, வட சென்னை, கனா, நம்ம வீட்டுப் பிள்ளை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று பிரபல நடிகையாக மாறி இருக்கிறார்.

இன்று இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்த அளவுக்கு ஐஸ்வர்யா ஃபேமஸ். இதனை தொடர்ந்து, காக்கா முட்டை படத்திற்காக இவருக்கு "சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதும்" சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரையும் செய்யபட்டவர்.

"தர்மதுரை" படத்திற்கு சீமா சிறந்த துணை நடிகை விருதும், சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டவர். இதனை புகழுக்கும் சொந்தக்காரியான ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது தனது இன்ஸ்ட்டா, பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்,

அதனை தொடர்ந்து தற்பொழுது ஹோம்லி லுக்கில் கிளாமராக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகை நயன்தாராவுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் சிரஞ்சீவி..! மகிழ்ச்சியில் இயக்குனர்..!