இந்திய இசை உலகின் உட்சபச்ச நட்சத்திரமும், காலத்தைக் கடந்த பாடகியும், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில்வாழ்ந்து வருபவர் தான் பாடகி ஆஷா போஸ்லே. ஆஷா போஸ்லே, பாலிவுட்டின் முன்னணி பின்னணி பாடகிகளில் ஒருவர் மட்டுமின்றி, இந்திய இசைத் துறையின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறார். அவர் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பல மொழிகளில் பாடியுள்ளார். இது மட்டுமன்றி, அவர் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடி, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, உருது, குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடிய இவர், பல்வேறு இசைமுறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு பிலிம்ஃபேர், நேஷனல் அவார்ட்ஸ், மற்றும் பத்ம விபூஷன், பத்மபூஷன் போன்ற முக்கியமான விருதுகளை பெற்றவர் ஆஷா போஸ்லே. அவரது குரல், பாணி, எழுச்சி மற்றும் காதல் பாடல்களில் காணப்படும் நுண்ணிய உணர்வுகள் அனைத்தும், பல தலைமுறைகள் ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கின்றன. தற்பொழுது இவர் பற்றிய ஒரு செய்தி தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி, “ஆஷா போஸ்லே மரணமடைந்துவிட்டார்” என்ற செய்தி இணையத்தில் வைரலாக பரவி, இசை உலகம், சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த செய்தி உண்மையல்ல வதந்தி என தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆஷா போஸ்லேயின் மகனும், மருத்துவருமான ஆனந்த் போஸ்லே நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். இதனை குறித்து பேசிய அவர், "என் தாயார் ஆஷா போஸ்லே மிகவும் நலமாக இருக்கிறார். அவர் வீட்டில் தன் குடும்பத்துடன் நேரத்தை கழித்து வருகிறார். சமூக ஊடகங்களில் பரவும் மரணச் செய்திகள் முற்றிலும் தவறானவை. நாங்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைகளையும் பரிசீலிக்கிறோம்," என கூறியுள்ளார். மேலும், அப்படியான செய்திகளை பரப்பும் முன் துல்லிய தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையையும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா பாடல்'..! ரசிகர்களை அதிரவைத்த அதிதி ஷங்கர் குரல்..!
சமீப நாட்களாக சமூக ஊடகங்களில், குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பிரபலங்கள் குறித்த தவறான செய்திகள் மற்றும் மரண வதந்திகள் பரவுவது சாதாரணமாகி வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனிப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ரசிகர்கள் அதனை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதால், அந்த தகவல்கள் எளிதில் பரவுகின்றன. இதேபோல் தான் தற்பொழுது ஆஷா போஸ்லே குறித்து பரவிய இத்தகைய வதந்தியும் எளிதில் வைரலாகிறது. இதனால் அவரது குடும்பம், நெருங்கியவர்கள் மற்றும் அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் என அனைவரும் மிகுந்த சோகத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்தனர். ஆனால், ஆனந்த் போஸ்லேவின் அதிகாரப்பூர்வ விளக்கம் தற்பொழுது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆஷா போஸ்லே உயிருடன் நலமாக இருப்பதை உறுதி செய்ததும், பலர் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி வாழ்த்துகள் கூறத் தொடங்கி உள்ளனர். மேலும் ஆஷா போஸ்லேவின் தெய்வீக குரலின் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. அவர் இன்னும் தனது இசை பயணத்தை தொடரும் திறமையும் உறுதியும் கொண்டுள்ளார்.

வதந்திகளை பரப்புவது மிகவும் பொறுப்பில்லாத செயலாகும். இவை, ஒரு குடும்பத்தின் மனநலத்தையும் பாதிக்கக்கூடியவை என்பதால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், தவறான செய்திகளை பகிர்வதற்கும் பரப்புவதற்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: இசைஞானி பாடலை தொட்டாலே ஷாக் தான்.. ரிலீசான இன்றே வந்த சிக்கல்.. தலையை பிய்த்து கொள்ளும் வனிதா..!