தென்னிந்தியத் திரையுலகில் தனது நடிப்பாலும் அசத்தலான நடனத் திறமையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை ஸ்ரீலீலா.

குறிப்பாக, அவர் நடனமாடும் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்குத் திரைப்படங்கள் மூலம் பிரபலமான இவர், தற்போது தமிழ் மற்றும் இந்தி திரையுலகிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார். 
அந்த வகையில், ஸ்ரீலீலா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அழகிய லெஹங்கா உடையில் பாரம்பரிய தோற்றத்தில் ஜொலிக்கும் அவரது புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை அர்ச்சனா குமாருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சா..! வாழ்த்தோடு சேர்த்து கவலையில் இளசுகள்..!

சினிமாவில் ஒரு நடிகை பிரபலமடைவதற்கு நடிப்பு, தோற்றம், கதாபாத்திரத் தேர்வு எனப் பல அம்சங்கள் முக்கியமாக இருக்கின்றன.

ஆனால், சில நடிகைகள் தங்களது நடனத் திறமையின் மூலமாகவே தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிடுகின்றனர். அந்த வகையில், ஸ்ரீலீலாவுக்குத் தனி இடம் உண்டு.

தெலுங்குத் திரையுலகில் கவனம் பெற்ற ஸ்ரீலீலா, தனது துடிப்பான நடன அசைவுகள் மற்றும் திரையில் வெளிப்படுத்தும் உற்சாகமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

குறிப்பாக, வேகமான நடன அசைவுகளைக் கொண்ட பாடல்களில் அவர் வெளிப்படுத்தும் திறமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அப்பாடி 11 வருஷம் போயாச்சு..!! ஒருவழியா ஓடிடிக்கு வந்த ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’.!! கண்ணீர்மல்க நன்றி சொன்ன இயக்குநர் சேரன்..!