இந்திய சினிமா உலகத்தில் அபொழுதுதே பாண் இந்தியா ஸ்டாராக வலம் வந்த நடிகை யார் என கேட்டால் அனைவரது மனதிலும் தோன்றும் ஒரே நடிகை ஸ்ரீதேவி மட்டும் தான். அப்படிப்பட்ட ஸ்ரீ தேவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவையும், ஹிந்தி படங்களின் மூலம் பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கிய இவர், ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியதுடன் அதே பெயரையும் அடைமொழியாக கொண்டவர். அவரது திடீர் இறப்பு 2018-ம் ஆண்டு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
அவரின் இரு மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர், இப்போது ஹிந்திச் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இவர்களின் தந்தையும் ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர், முன்னணி தயாரிப்பாளராக பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெற்றிப் படங்களை வழங்கிய போனி கபூர், சமீபத்தில் தமிழ் சினிமாவிலும் தனது காலடி தடத்தை பதித்துள்ளார். அதன்படி, அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து, தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். வணிக ரீதியாகவும், கதாபாத்திரங்களின் தேர்விலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார் போனி கபூர்.இப்படி இருக்க, இப்போது அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் வழுக்கை தலையுடன், உடல் பருமனான தோற்றத்தில் காணப்பட்ட போனி கபூர், தற்போது 26 கிலோ எடையை குறைத்து, அழகாக மாற்றமடைந்துள்ளார். அதுமட்டுமல்ல முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து அவர் கூறும்போது, " எனது மனைவி ஸ்ரீதேவி, எப்போதும் என்னிடம் சொல்வார் ‘எடையைக் குறைத்துக்கொள், அழகாக மாறு. தேவைப்பட்டால் முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொள்’ என, ஆனால் நான் அவ்வளவு முக்கியத்துவம் எனக்கு கொடுப்பதில்லை. 'எதற்குத் தேவையில்லாத வேலை என்று எண்ணுவேன். ஆனால் இப்போது, அவர் இல்லாத நிலையில், அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதனால் தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து, என் தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளேன். ஆனால், இந்த மாற்றத்தை அவர் காண அவர் இல்லை என்பதே எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘காதல்’ பட நாயகி நினைவிருக்கா...! சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சந்தியா..!
அவர் கூறியதை பார்க்கும் பொழுது இது வெறும் உடல் மாற்றமாக பார்க்க முடியவில்லை, இது ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து வரும் காதல், உருக்கம் மற்றும் அவர்கள் மீது கொண்ட பற்றுதலின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. தனது மனைவியின் கனவுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரின் ஆசைகளை இன்று நடைமுறையில் மாற்றியுள்ளார் போனி கபூர். அவரது தற்போதைய தோற்றப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவ, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். இது ஒருபக்க இருந்தாலும், திருமணத்திற்கு பின்பாக பணி பரபரப்பில் இருந்தபோதும், ஸ்ரீதேவிக்கும் போனி கபூருக்கும் இடையே இருந்த உறவு சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்தது. அவர்களுக்கு இடையிலான காதல், பரஸ்பர புரிதல், பாசம், அவர்களின் பேட்டிகளில் நமக்கே பொறாமை வரும் அளவுக்கு இருக்கும். இப்போது அந்த காதலை மீண்டும் நினைவூட்டும் விதமாக அவரது இந்த தோற்றமாற்றம், நம்மை உருக்க வைக்கிறது. மிகுந்த முயற்சி, ஒழுங்கான உணவுமுறை மற்றும் தவறாத உடற்பயிற்சி மூலமாக, போனி கபூர் இன்று தனக்கே புதிய தோற்றத்துடன் மாறியிருக்கிறார்.

இது சினிமாவுக்காக மட்டுமல்ல. இது அவரது வாழ்க்கைத் துணையின் நினைவாகவும், அவரின் சொற்களை நிறைவேற்றும் ஒரு சிந்தனையாகவும் அமைந்து இருக்கிறது. "இது என் மனைவியின் ஆசை. இன்று அதை நிறைவேற்றுகிறேன். ஆனால், அதைக் காண அவர் இல்லை என அவர் சொன்னது மனதை புண்படுத்துகிறது... என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னை வெளியே நிக்க வச்சாங்க.. சினிமாவில் சொகுசு கார் வச்சுதான் மரியாதை..! பகிர் கிளப்பிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்...!