ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டியும், தமிழக முதல்வர் தலைமையில் அஞ்சலி, அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை ஜனாதிபதி மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர் அஞ்சலி செலுத்த உள்ளதால் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 1 டிஐஜி, 20 எஸ்பி, 27 ஏ டி எஸ் பி, 80 டிஎஸ்பி க்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைச்சர்கள் சார்பில் அஞ்சலியும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக, மதிமுக, அமமுக, காங்கிரஸ் சார்பில் அஞ்சலியும் செலுத்த பட உள்ளது. இதனை ஒட்டி பசும்பொன் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தபட்டு, watching tower அமைத்து பசும்பொன் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 80 டிஎஸ்பி தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 600 கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அதை அனைத்தும் பசும்பொன்னில் உள்ள மினி கண்ட்ரோல் சென்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாடகை வாகனங்களில் பொதுமக்கள் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும், வாடகை வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் குறித்து அவதூறு.. கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் மருத்துவமனையில் அட்மிட்..!!
பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண், பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதுகாப்பு பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41) கமுதி சென்றுள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாக இருமல் தொடர்ந்ததையடுத்து அங்கிருந்தவர்கள், கலைவாணியை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் கலைவாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த கலைவாணியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கமுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் தலைமைக் காவலர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2 வாரம் ரெஸ்ட்... அப்புறம்தான் ஆட்டமே இருக்கு...! வானிலை மையம் எச்சரிக்கை..!