வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் யாசகம் கேட்பதாக நாடுகடத்தப்பட்டவர்களில் 90% பேர் பாகிஸ்தானியர்கள் என நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு நாடாளுமன்றத்தில் வைத்து, யாசகம் பிரச்சனையை ஒப்புக்கொண்டிருப்பது இது முதல் முறை இல்லை. தற்போது பிரதமராக இருக்கும் ஷெபாஷ் ஷெரிப், முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலேயே இந்த பிரச்சனை எழுந்திருந்தது. அதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த பிரச்சனை குறித்து இந்தியாவும் தனது கவலையை தெரிவித்திருந்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை பிச்சைக்கார நாடு என்று வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். தீவிரவாத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அந்நாட்டுக்கு $1 பில்லியன் உதவித் தொகையை சமீபத்தில் ஐஎம்எஃப் வழங்கியிருந்தது. இந்த நிதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் இவ்வாறு விமர்சனம் செய்திருந்தார். பாகிஸ்தானியர்கள் ஹாஜ் போன்ற புனித யாத்திரை விசா எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு யாசகம் தொழிலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசுகையில், 2.2 கோடி பாகிஸ்தானியர்கள் யாசக தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாக்., துருக்கி ட்ரோன்களை அழித்த இந்தியாவின் D4 கருவி.. வியந்துபோன அமெரிக்க போர் நிபுணர்.!!

இது ரூ.3.3 லட்சம் கோடி அளவிளான முறைகேடான பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது. இந்த பிரச்சனை காரணமாக, சாதாரண பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடுகளில் வேலையும் அதற்கான விசாவும் கிடைப்பது கடினமாகி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் உள்விவகாரத்தறை அமைச்சர் மோஷின் ராசா நக்வி, கடந்த 2024ம் ஆண்டு முதல் இப்போது வரை வெளிநாடுகளில் பிச்சை எடுத்ததாக மொத்தம் 5,402 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, ஈராக், மலேசியா, ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமானவர்கள் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்துமட்டும் 5,033 பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் சவூதிஅரேபியாவில் இருந்து 4,850 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் இருந்து சிந்து மாகாணத்தை சேர்ந்த 2,428 பேர் நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 1098 பேர், கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த 819 பேர், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 117 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நல்லெண்ண எம்.பி.க்கள் குழு.. மலிவான அரசியல் விளையாட்டில் பாஜக.. புட்டுப் புட்டு வைத்த காங்கிரஸ்.!!