சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விக்கிரமன் ஹார்வி செட்டியார்(34). கடந்த 2023ம் ஆண்டு போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, 2023 ஏப்ரல் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் விக்கிரமன் பதிவிடுகையில், அப்போது அதிபராக இருந்த ஹலிமா யாக்கோப் கொல்லப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த இன்ஸ்டா போஸ்ட் வைரலானதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து விக்ரமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாவட்ட நீதிபதி லோரேய்ன் ஹோ பல கடுமையான நிபந்தனைகளுடன் அவரை ஜாமீனில் விடுவித்தார். வழக்கு விசாரணை நடந்த போது தனக்கு மனநலம் பாதிப்பு இருப்பதாக விக்கிரமன் கூறினார். ஆனால்,மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்தது.
இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!

பின்னர் 2024 மார்ச் 5 முதல் 7ம் தேதி வரை விசாரணைக்கு தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையில் கலந்து கொள்ளுமாறு விக்கிரமனுக்கு நீதிமன்றம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது. ஆனால் அதற்கு முறையாக பதிலளிக்காத விக்கிரமன் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதியிருந்தார். அதன் பின்னர் போலீஸ் அதிகாரி விக்கிரமனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

அப்போது நீதிபதியை பார்த்து அந்த இளைஞர் மிலார்ட் உங்களை கத்தியால் குத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி புகார் அளித்த புகாரின் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட விக்கிரமனுக்கு ஒரு வருடம் ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: இந்த அதிகாரிகள் போல் இருக்காதீர்கள்...நான் அனைத்தையும் கவனிப்பேன்...டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு