• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    மதம் மாறியதன் காரணமாகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகள் மறுக்கப்படுவதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என பெ சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 15 Oct 2026 20:45:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Do Not Strip Reservation Rights Over Conversion: CPI(M) Urges TN Govt to Enact Legal Amendment.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மதம் மாறியதன் காரணமாக அவர்களின் இடஒதுக்கீட்டுப் பயன்களை மறுக்கும் வகையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கவலையளிப்பதாகவும், மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மதம் மாறியதன் காரணமாக, அவர்களுடைய சமூகப் பின்தங்கிய நிலையைப் புறக்கணித்து இடஒதுக்கீட்டுப் பயன்களை மறுக்கும் வகையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் கவலையளிக்கிறது. சமூகநீதி என்பது மத அடையாளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியதல்ல; மாறாக, சமூக ஒடுக்குமுறை, வரலாற்று ரீதியான பின்தங்கிய நிலை, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்பட வேண்டியதாகும்.

    CPIM

    மதம் மாறுவதால் ஒருவரின் சமூகப் பின்தங்கிய நிலை தானாகவே மாறிவிடுவதில்லை. சாதிய ஒடுக்குமுறையும் சமூகப் பாகுபாடுகளும் மத எல்லைகளைக் கடந்து பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, மதமாற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டு உரிமைகளை மறுப்பது, சமூகநீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.

    இதையும் படிங்க: இஸ்லாம் தழுவியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பா?உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

    தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்னரும், உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) வகுப்புச் சான்றிதழ் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், 2024 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து வழங்கிய தீர்ப்பை, தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. மதம் மாறியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் பல்வேறு தரப்புகளாலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

    மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் ஆகிய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். மத அடையாளத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதும், சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களிடையே உரிமைகளுக்கான போட்டியை உருவாக்குவதும் பிற்போக்கான அணுகுமுறையாகும். இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமே சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதுதான்.

    எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மதம் மாறியதன் காரணமாகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமைகள் மறுக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகச் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

    சமூகநீதி என்பது வெறும் முழக்கமல்ல; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான நடைமுறையாகும். மதம் மாறியவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் சமூகநீதியையும் மதச்சார்பின்மையையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    மேலும் படிங்க
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    சினிமா
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    சினிமா
    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    உடல்நலம்
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு
     எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    தமிழ்நாடு

    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share