இருதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை போல் இனி ஆண்களுக்கு புது வாழ்வு அளிக்கும் ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சையும் உலக அளவில் பிரபலமாகும் நிலை உருவாகி இருக்கிறது.
அதற்கு முன்னோடியாக நமது ஹைதராபாத் மருத்துவமனை டாக்டர்கள், வெற்றிகரமான புதிய ஆண்குறி உருவாக்கி அறுவை சிகிச்சை மூலம் இளைஞர் ஒருவருக்கு அதை பொருத்தி, இமாலய சாதனை படைத்துள்ளனர்.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவருக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு உள்ளது. நான்கு வயதாக இருந்தபோது, நுனி தோலை அகற்றும் போது அவருடைய ஆண்குறியில் கடுமையான நோய் தொற்று ஏற்பட்டு முழுமையாக சேதம் அடைந்து விட்டது.
இதையும் படிங்க: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்! கடனுக்கான வட்டிவீதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி

இதற்காக பல்வேறு நாடுகளில் அந்த இளைஞர் சிகிச்சை பெற்றும், சிறுநீர் கழிப்பதற்கு கூட முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் அந்த இளைஞரை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள "மெடி கவர்" தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து டாக்டர்களிடம் பரிசோதனை செய்தனர்.
அந்த மருத்துவமனையின் மூத்த சிறுநீரகம் மற்றும் ஆண் உறுப்பு - ஆண்மை இயல் சிகிச்சை நிபுணரான டாக்டர் ஏ வி ரவிக்குமார் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தாசரி முத்து வினய் குமார் ஆகியோர் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்தனர்.
மற்ற உடல் உறுப்பு மாற்று அருவை சிகிச்சை போல் தானமாகவோ அல்லது விலை கொடுத்து வாங்கவோமுடியாத உறுப்பு இது. மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்பு மூலமும் இதுவரை அறுவை சிகிச்சைகள் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை.

எனவே சிகிச்சைக்கு வந்திருக்கும் இளைஞரின் முழங்கையில் இருந்து புதிய ஆணுறுப்பை உருவாக்குவதற்காக சிக்கலான 10 மணி நேர( ரத்த நாளங்கள், நரம்புகளில் மேற்கொள்ளப்படும்) நுட்பமான "மைக்ரோ வாஸ்குலார்"என்ற அறுவை சிகிச்சையை அவர்கள் தேர்வு செய்தனர்.
முக்கிய ரத்த நாளம் ஒன்றை பயன்படுத்தி புதிய உறுப்பை வெற்றிகரமாக உருவாக்கி இளைஞரின் முதலில் பொருத்தி அவர்கள் சாதனை படைத்தனர். உடனடியாக அந்த இளைஞரால் புதிய உறுப்பு மூலம் மற்றவர்களைப் போல் சிறுநீர் கழிக்க முடிந்தது. இதை அந்த இளைஞரே செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன்பகிர்ந்து கொண்டார்.
அடுத்து இந்த சிகிச்சையின் முக்கியத்துவம் என்னவென்றால், இனி மற்ற ஆண்களைப் போல் அவரும் தாராளமாக தாம்பத்திய உறவில் ஈடுபட்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.
ஆண்மைக்குரிய இயல்பான உணர்வுகளையும் விறைப்புத் தன்மையையும் அவர் பெறுவதற்காக மற்றொரு சிகிச்சையும் அந்த இளைஞருக்கு அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் அவர் இயல்பான தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். இது பற்றி குறிப்பிட்ட அந்த இளைஞன் இது தனக்கு கிடைத்த புது வாழ்க்கை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிப்ரவரி 13 மோடி - டிரம்ப் சந்திப்பு..! இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன..?