உலகத்தையே அதிர வைத்த ஆமதாபாத் விமான விபத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய 171 ரக விமானம், டேக் ஆப் ஆன ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்குள்ளானது. ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் மெஸ் பில்டிங் மீது விழுந்து வெடித்தது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் இறந்தனர். ஒருத்தர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்ததில் கல்லூரி மெஸ், விடுதியில் இருந்த மேலும் 33 பேர் மரணம் அடைந்தனர். மொத்த பலி 274 ஆக உயர்ந்தது.
உலகை உலுக்கிய விமான விபத்து எப்படி நடந்தது என்று இப்போது வரை தெரியவில்லை. பொதுவாக 3000 முதல் 4000 அடி உயரத்தில் விமானம் பறக்கும். அவ்வளவு உயரத்துக்கு டேக் ஆப் செய்ய வேண்டும். ஆனால் 645 அடி விமானம் சென்ற போதே சட்டென கீழே இறங்கி விழுந்து நொறுங்கியது.
கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பைலட் மேடே அலர்ட் விடுத்து இருந்தார். இது விமானம் ஆபத்தில் சிக்கி இருப்பதை சொல்ல பயன்படுத்தும் ஒரு அபாய வார்த்தை. இதை சொன்ன மறுநொடியே விபத்து நடந்து விட்டது.
இதையும் படிங்க: ஐ.நா., விசாரணை வேண்டாம்.! நாங்களே பார்த்துக்குறோம்! ஏர் இந்தியா விமான விபத்தில் மத்திய அரசு திட்டவட்டம்..

எனவே பிளாக் பாக்ஸ் கிடைத்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று முதலில் சொல்லப்பட்டது. விமானம் துவக்கம் முதல் விபத்து வரை எந்த நேரத்தில் எவ்வளவு வேகம், எவ்வளவு உயரத்தில் சென்றது என்பதை எல்லாம் இதை வைத்து கண்டுபிடிக்கலாம். தற்போது இதிலிருந்து தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது. சர்வதேச விமான போக்குவரத்து இயக்க விதிமுறைகள்படி விபத்து நடந்த 30 நாளுக்குள், முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். விமான விபத்து விசாரணை அமைப்பு Aircraft Accident Investigation Bureau(AAIB) விபத்து நடந்த நாளில் இருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டியும், விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியும் தகவல்களை திரட்டியது.

அத்துடன் விமான கருப்பு பெட்டி(Cockpit Voice Recorder - CVR, விமானிகளின் பேச்சுகள், விமான தரவு பதிவு Flight Data Recorder போன்றவற்றையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு, வானிலை, நாசவேலை, விமான நிலைய பராமரிப்பு குறைபாடுகள் என பல கோணங்களில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், விசாரணை அறிக்கையின் முழு விவரம் இந்த வாரத்துக்கு பிறகு வெளியிடப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விமான விபத்தில் கருகிய உடல்கள்.. டாடா குழும தலைவர் எழுதிய உருக்கமான கடிதம்!