தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி தாயார் சரஸ்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் தைலாபுரம் இல்லம் வருகை தந்த அன்புமணி ராமதாஸ் ஆசிர்வாதம் பெற்று குடும்பத்தினருடன் இரண்டு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் தைலாபுரம் இல்லம் வருவதை அன்புமணி தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று தாய் சரஸ்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெறுவதற்காக அன்புமணி, மனைவி செளமியா அன்புமணி மற்றும் மூன்று மகள்களுடன் தைலாபுரம் இல்லம் வருகை தந்தார்.

மருத்துவர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்த நிலையில், அன்புமணி தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பதாகக்கூறி கடந்த 9ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தியுள்ளார். இந்நிலையில் வருகின்ற 17ஆம் தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அறிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ் அப்பொதுக்குழு திருப்புமுனையாக அமையும் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: “அங்கிட்டும் வேணாம்... இங்கிட்டும் வேணாம்”... புது ரூட்டில் முகுந்தன்... விட்டுக்கொடுக்காத காந்திமதி...!

இந்நிலையில் அன்புமணி குடும்பத்துடன் தைலாபுரம் இல்லம் வருகைதந்து தாய் சரஸ்வதியிடம் ஆசிர்வாதம் பெற்றார் தொடர்ந்து குடும்பத்தினருடன் பேசிய அன்புமணி இரவே சென்னை புறப்பட்டு சென்றார். வருகின்ற 17ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணி குடும்பத்துடன் தைலாபுரம் வந்து சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அன்புமணி கடைசியாக ஜூன் மாதன் 5ஆம் தேதி மருத்துவர் ராமதாசை சந்திக்க தைலாபுரம் இல்லம் வந்து ராமதாசு உடன் சிறிது நேரம் பேசி சமாதான முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய தனது தந்தை ராமதாசை சந்தித்து அன்புமணி குடும்பத்துடன் சமாதானம் செய்ததாக கூறபடுகிறது. இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “ஒண்ணே ஒண்ணுக்கும் ஆப்பு” அன்புமணியின் அடிமடியில் கைவைத்த ராமதாஸ்... டெல்லிக்கு பறந்த புகார் கடிதம்...!