தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது.

வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். 19வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கஞ்சா வழக்கப் போடுவோம் என போலீசார் தங்களை மிரட்டுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊர்க்காவல் படையில் திருநங்கையர்கள்... பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..!
ஆசிரியர்களின் பைகளில் கஞ்சாவை வைத்து விட்டு கைது செய்வோம் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் நடத்தப் போவது எங்கே என தெரிந்து கொள்வதற்காக தன்னை மிரட்டியதாக இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்திற்கு போராடச் சென்ற ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு புனைவோம் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் காணும் பொங்கல்... தீவிர பாதுகாப்பு பணி... மெரினாவில் குளிக்கத் தடை...!