அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சந்திப்பின் போது முதற்கட்டமாகத் தொகுதி பங்கீடு குறித்த மேலோட்டமான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
எடப்பாடி பழனிசாமியுடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, பாஜகவிடம் தொகுதி பங்கீடு குறித்துத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தரப்பில் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இதேபோல், பாஜக தரப்பிலும் கட்சியின் மூத்த தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அறிவிக்கப்பட உள்ளது. இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வக் குழுக்கள் அமைக்கப்பட்ட பின்னரே, எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாஜக தரப்பிலிருந்து வரும் தகவல்களின்படி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொகுதி பங்கீடு குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கூட்டணி குறித்து நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு இன்றைய சந்திப்பு முற்றுப்புள்ளி வைக்கும் எனத் தெரிகிறது. மேலும், பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் இன்றைய சந்திப்பின் போது ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... அமித் ஷா சந்திப்பு எதிரொலி..! இபிஎஸ் உடன் நயினார் முக்கிய ஆலோசனை...!
இதையும் படிங்க: "நாங்க எப்போவுமே ஒண்ணுதான்!" தினகரன் உடனான நெருக்கம் குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில்!