மருத்துவமனை திறப்பு விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற நாம் எடுத்து வரும் முயற்சிகளில் இந்த பெரியார் மருத்துவமனை என்பது ஒரு மைல்கல் என கூறினார்.மருத்துவமனையை கம்பீரமாக உருவாக்கி, முழு மூச்சோடு ஈடுபட்டு எல்லா வகையிலும் துணை நின்றிருக்கும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் வசதிகள் வேண்டும் என்று விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு 210 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ஆறு அடுக்கு தளங்களில் 560 படுக்கை வசதிகளோடும், ஆறு அறுவை சிசிச்சை அரங்கம், நவீன ரத்த வங்கி,புற்றுநோயியல் பிரிவு, இருதயவியல் பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, நரம்பியல் பிரிவு, மகப்பேறு பிரிவு என எல்லா வசதிகளோடும் பிரம்மாண்டமாக இந்த உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகியிருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழிவாங்க பெண் வழக்கறிஞர் எடுத்த அஸ்திரம்… தூள் தூளாக்கிய இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ்

மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் உங்களை நம்பி மருத்துவம் பார்க்க வரும் மக்களை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பரிவோடு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர்,பெரியார் மருத்துவமனையை நம்முடைய கொளத்தூர் தொகுதியில் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கப்போகும் இந்த மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்று கூறினார் . மேலும்,
எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் – 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸை நேருக்கு நேர் பார்த்து ஷாக்கான எடப்பாடியாரின் மகன் மிதுன்… அடுத்து நடந்த ட்விஸ்ட்..!