மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி கோவையிலிருந்து புறப்படும் கோவை – நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) சேவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வழக்கமாக கோவையில் இருந்து புறப்பட்டு கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக நாகர்கோவில் சென்றடையும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பர் 3-ஆம் தேதி வழக்கமான பிரதான வழித்தடத்தில் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மாற்றுப்பாதையான போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வழியாகத் திருப்பி விடப்பட்டு திண்டுக்கல் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பகீர் கொலை! நண்பரின் முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி சரமாரி கத்திக் குத்து! அதிர்ச்சி சம்பவம்!
மேலும், திண்டுக்கல் சந்திப்பு முதல் நாகர்கோவில் வரையிலான குறிப்பிட்ட ரயில் சேவை செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மாற்றுப்பாதையில் இயக்கப்படும் போது போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் ஏறி இறங்கும் வகையில் ரயில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த வழித்தட மற்றும் சேவை மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்! மீதமுள்ள 17க்கும் சிக்கல்?