புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அக்டோபர் 21ஆம் தேதி காலை வரையிலான 24 மணி நேரத்தில் முறையே 17.5 மி.மீ. மற்றும் 18.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கடலாக மாறிய புழல் ஏரி... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம்... காலையிலேயே சென்னைக்கு அதிமுக்கிய வார்னிங்...!
இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING வெளியானது ஹைஅலர்ட்... உருவானது முதல் புயல் சின்னம்... அடித்து நொறுக்கப்போகும் கனமழை...!