கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியானது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். பாஜகவின் தமிழக அரசியல் பயணம் என்பது சற்று சறுக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.
திராவிட கொள்கைகளால் தமிழகம் சூழப்பட்டிருக்கும் நிலையில் பாஜகவின் கொள்கை முரண்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக கூட்டணி பலமாக மாறும் என்று அடிக்கடி கூறி வந்தனர்.

பல கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அதிமுகவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை சேர்ந்து சந்திக்க பாமக முடிவு செய்துள்ளது. அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிகாரப்பூர்வ தகவலை இபிஎஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர். அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுகவுடன் களமிறங்கிய பாமக…! கூட்டணியை உறுதி செய்த இபிஎஸ் - அன்புமணி…!
டெல்லி செல்லும் இபிஎஸ் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு அமித் ஷா வந்திருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்காத நிலையில் இன்று மாலை டெல்லி சென்று அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சீட் தருவதாக சொன்னால் நம்பி ஏமாறாதீர்கள்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் குறித்து இபிஎஸ் எச்சரிக்கை!