தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. இதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நகர்வுகள் வேகமெடுத்தன. பாமகவில் நீண்டகாலமாக நிலவி வரும் உள் கட்சி மோதல் இந்த கூட்டணி விவகாரத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே தலைமை மற்றும் கொள்கை விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
கடந்த ஆண்டுகளில் ராமதாஸ் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில், அன்புமணி தரப்பு அதிமுகவை நோக்கி திரும்பி உள்ளது. முக்கிய நிகழ்வாக, இன்று அன்புமணி ராமதாஸ் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் இணைவதாக உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "சீட் தருவதாக சொன்னால் நம்பி ஏமாறாதீர்கள்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் குறித்து இபிஎஸ் எச்சரிக்கை!

இந்த நிலையில், அதிமுக மற்றும் பாமக இடையே தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பாமக தலைவர் அன்புமணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்புமணி ஆகியோர் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி என்று தெரிவித்தார். மேலும் திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
கூட்டணி பங்கீடு தொடர்பாக பேசி இருப்பதாகவும், விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளதாக கூறினார். தங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்று உறுதிப்படக் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருவதாகவும், ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கோம்… ஆளுநரை சந்தித்த இபிஎஸ் விளக்கம்…!