மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், திருவாரூரில் விவசாயிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது, அதிக மழையால் வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைகின்ற போதும், வறட்சியால் சேதம் அடைகின்ற போதும், அதை முழுமையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு விவசாயிக்கு 2 1/2 ஏக்கர் நிலத்திற்கு தான் நிவாரணம் கொடுக்க முடியும் என்ற சூழல் இருக்கும் நிலையில், அதை நிராகரித்து விவசாயிகளுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு முழு நிவாரணம் வழங்கியது அதிமுக அரசாங்கம் தான் என்றார்.

அதேபோல் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்மணிகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனுக்குடன் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் என்றார்.
இதையும் படிங்க: சீப்பை ஒளிச்சா கல்யாணம் நிக்குமா? இபிஎஸ் போஸ்டர்கள் அகற்றப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம்..!
நானும் ஒரு விவசாயி, அதை அறிவித்த காமராசரும் விவசாயி, விவசாயிகளின் கஷ்டங்களை., துயரங்களை அனுபவ ரீதியாக அறிந்திருந்த காரணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்தோம் என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை, ஒரே வருடத்தில் பயிர் இழப்பீட்டுத் தொகை கொடுத்ததாக கூறினார். தற்போது பருவம் தவறிய மழை ஏற்படும் சூழ்நிலை மிகவும் கடினமானது தான் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நம்பி தான் வாழ்வாதாரமே இருக்கும் நிலையில், பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருக்கின்ற நிலையில், பயிர்கள் சேதம் அடையும் போது மனம் எந்தளவு வேதனைப்படும் என்பது ஒரு விவசாயிக்கு தான் தெரியும் என்றார். ஏற்கனவே நாங்கள் நடைமுறையில் வைத்திருக்கிறோம்., மீண்டும் உங்கள் துணையோடு அதிமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: காமராஜர் மீதான களங்கம்... கருணாநிதி வகையறாவின் வன்மம்! நடிக்காதீங்க ஸ்டாலின்.. விளாசிய இபிஎஸ்..!