ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி அருகே அமைந்துள்ள சிறிய கிராமமான பசும்பொன்னில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி ஒரு மாபெரும் விழா நிகழ்கிறது. அது, சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று முத்துராமலிங்கத் தேவரின் 118ஆவது ஜெயந்தி, அவரது 63வது குரு பூஜையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க பசும்பொன் செல்லும்வழியில் மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை முதல்வர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் முழு உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: அப்படியா சார்? யார் காலாவதி ஆவாங்கன்னு இன்னும் ஒரே மாசத்துல தெரியும்..! மாஜி அமைச்சருக்கு டிடிவி பதிலடி...!
இதனிடையே, பசும்பொன் முத்துராமலிங்கர் திருவருட்சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: நம்பியவர்களை அனாதையாக்கியவர் TTV தினகரன்... ஆர்.பி உதயகுமார் பதிலடி...!