தந்தை பெரியார் குறித்த அவதூறு தொடர்பான விசாரணைக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். ஈரோடு இடைத்தேர்தலின் போது தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குகள் பதியப்பட்டன. இரண்டு காவல் நிலையங்களில் பதிவான வழக்கு விசாரணைக்கு ஆஜராகினார்.
தொடர்ந்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது கொடும் துயரம் என்று தெரிவித்தார். மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வேடிக்கைதான் என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் பாமக இணைவது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என தெரிவித்தார். வரும் 21 ஆம் தேதி அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். 2026 பொங்கல் தைப்பொங்கலாக இல்லாமல் தேர்தல் பொங்கலாக மாறிவிட்டது என்று தெரிவித்தார். எல்லா மக்களும் போராடும் நிலை உள்ளதாகவும், கடன் சுமை அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தந்தை பெரியார் குறித்து அவதூறு... ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்...!
30 லட்சம் மடிக்கணினியை இப்போது கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்றும் கடந்த முறை ஏன் 3 ஆயிரம் ரூபாய் தரவில்லை என்றும் கேட்டார். இது மக்களுக்கான அரசியல் அல்ல என்று தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு வாக்குறுதி அளித்திருப்பது என்பது அமைப்பை பலப்படுத்துவது என்று கூறினார். அங்கு இருக்கும் வாக்குகள் அவர்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்தார். ஆனால் தூய்மை பணியாளர்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீரழியும் தோட்டக்கலைத்துறை... உடனே நிறுத்துங்க...! சீமான் வலியுறுத்தல்...!