ஓசூர் அருகே காதலியை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு லாரி முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: காதலி வேறொரு நபருடன் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் கொலை போலீஸ் தகவல்.
ஓசூர் அருகே காதலியை கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, வாலிபர் ஒருவர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் திவ்ஜா ஸ்ரீ (20). சின்ன வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (21). கல்லூரி காலத்தில் பழகிய இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!
திவ்ஜா ஸ்ரீ ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும், பிரதீப் ஜீ மங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
நேற்று மாலை இருவரும் ஜீ மங்கலத்தில் உள்ள பிரதீப்பின் அறைக்குச் சென்றனர். அங்கு திவ்ஜாஸ்ரீ யின் செல்போனை பிரதீப் பார்த்தபோது, அவர் மற்றொரு இளைஞருடன் நீண்ட நேரம் பேசி வந்ததும், செல்பி போட்டோ இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பிரதீப், தனது அறையில் சமையலுக்கு பயன்படுத்தும் அரிவாளால் திவ்யா ஸ்ரீயின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய பிரதீப், அவ்வழியாக வந்த லாரியின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது தனது காதலியை கொலை செய்ததாக பாகலூர் போலீசாருக்கு தெரிவித்தாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திட்டமிட்டு இக்கொலை நடக்கவில்லை என்றும், மற்றொருவருடன் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலை நடந்துள்ளதாகவும் செல்போன் தரவுகள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சுள்ளான் மதன் விவகாரத்தில் போலீஸ் அதிரடி.. சிக்கிய 13 பேர்..!! முடக்கப்பட்ட 77 சோசியல் மீடியா கணக்குகள்!!