தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானது. அது தற்போது மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பெரும்பாலும் அதே பகுதியில் நீடித்து, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதியான நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதி காலைக்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு-வடமேற்குத் திசையில் நகரும் இந்தப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று, அக்டோபர் 28-ஆம் தேதி காலையில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு அருகே மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING “ஒண்ணு இல்ல ரெண்டு...” - தமிழகத்தை சுத்துப்போட்ட 2 புயல் சின்னங்கள்... அதி பயங்கர எச்சரிக்கை...!
இந்தப் புயலால் தமிழகத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் இந்த அமைப்பு, தொடர்ந்து வடமேற்கு மற்றும் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, நாளை மறுநாள் திங்கட்கிழமை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, புயலின் காரணமாக தமிழகத்தில் அதிக காற்று வீசுவது, மரங்கள் முறிந்து விழுவது, கட்டிடங்கள் சேதமடைவது போன்ற பாதிப்புகள் இருக்காது என்றும், ஆனால் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில், அதற்கு ஏற்கெனவே பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் வழங்கியுள்ள ‘அர்ணாப்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படும் இது, நடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் முதல் புயலாக உருவாக உள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும், மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!