விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படக்குழு கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கைக்கு சமர்ப்பித்தது. ஆனால், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்ட் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்று கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. தணிக்கை சான்று விவகாரத்தில் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது தவறானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

விஜயின் ஜனநாயகம் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற முத்தரவு பிறப்பித்தது. இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஜனநாயகன் படத்திற்கு U/A சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: #BREAKING: ஜன நாயகனுக்கு U/A... உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஆணை… அதிரடி தீர்ப்பு வழங்கிய ஹைகோர்ட்..!
இதை அடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தலைக்குச் சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் அதனை விசாரணைக்கு எடுப்பது குறித்து பிற்பகலில் பரிசீலிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மத்திய தணிக்கை வாரிய தலைவர் சார்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அது எப்படி முடியும்? ஜனநாயகனுக்கு மோடி அழுத்தம் தரல... வரிந்து கட்டி வந்த செல்லூர் ராஜு..!