மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை பெருவிழா முக்கிய உற்சவமான திருக்கல்யாண உற்சவம் மே 8-ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இந்த திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகளும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First) என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பதிவு செய்ய https://hrce.tn gov.in -லும் இணையதளமான இணையதளமான மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in-லும் 29.04.2025 முதல் 02.05.2025-ந் தேதி இரவு 9.00 மணி முடிய கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதையும் படிங்க: பிஞ்சுகள் மனதில் வன்முறை!அரிவாள் வெட்டு சம்பவத்தில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை ...
ரூ.500/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரே நபர் ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது.

12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டணச்சீட்டு வாங்க வேண்டும். பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். மேலும் மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு(Aadhaar Card) ஆளறிச்சான்றாக (Photo ID proof) கொண்டு, தங்களது கைபேசி எண்ணுடன் (Mobile No.), மின் அஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail ID) அதன் விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் விண்ணப்பித்துள்ள பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யப்படும். இதனையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட தகவல் (confirmed message அவர்களால் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் / கைபேசி எண்ணிற்கும் 03.05.2025-ஆம் தேதி அனுப்பப்படும்.

உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் / குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் 04.05.2025 முதல் 06.05.2025 வரையுள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி முடிய மதுரை, மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திருக்கல்யாண நுழைவு கட்டணச்சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் / குறுந்தகவலைக் காட்டி, கட்டணச் சீட்டிற்கான தொகையினை ரொக்கமாக செலுத்தி கட்டணச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்பு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்க இயலாது.

திருக்கல்யாணம் (08.05.2025) காலை 08.35மணி முதல் 08.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.500/- இராஜகோபுரம் மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள அமைக்கப்பட்ட பாதை வழியாக வந்து வடக்கு இராஜகோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட இடங்களில் காலை 07.00 மணிக்குள் அமர வேண்டும்
இதையும் படிங்க: அந்த பொண்ணு சம்மதத்தோட தானே நடந்துச்சி.. 15 சிறுமி கர்ப்பம்.. போக்சோ வழக்கில் நீதிபதி சர்ச்சை தீர்ப்பு..!