ஜூலை 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க தவறிறாதீர்கள் - தகுதி உள்ளவர்களுக்கு 10, 20 நாட்களிலே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அருப்புக்கோட்டையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!
அதில் அரசின் திட்டங்கள் முறையாக வந்து சேர்ந்துள்ளதா இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என கேட்டு அறிந்து திமுகவில் உறுப்பினர்களாக சேர விருப்பமா என கேட்டு அவர்கள் சம்மதத்துடன் திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது பெண்கள் சிலர் எங்களுக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என கோரிக்கை வைத்தனர். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு கேம்ப் போடுகிறோம். இந்த கேம்ப்ல விண்ணப்பிங்க, யார் யாருக்கு தகுதி இருக்கோ அவங்களுக்கு கண்டிப்பாக வழங்குவோம். நீங்க அந்த கேம் இருக்கு வராமல் இருந்து திரும்ப கேட்க கூடாது அதனால் ஒரு நாள் செலவழித்து அந்த கேம்பில் விண்ணப்பியுங்கள். நாங்களும் ஒரு லிஸ்ட் வைத்துள்ளோம். உங்களுக்கு என்ன வேணும், என்ன வந்து உள்ளது என ஒரு விவரம் வைத்துள்ளோம்.

ஜூலை 15ஆம் தேதி முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் இந்த சிறப்பு முகாமில் தவறாமல் விண்ணப்பியுங்கள். தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை 10 முதல் 20 நாட்களில் வழங்கப்படும் என தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!