தமிழகத்தில் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் பல நல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இலவச ரேஷன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதால்தான், கேஒய்சி சரிபார்க்கப்பட்டு வருகிறது.

ரேஷன் திட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தி கொண்டிருப்பதாகவும் சிலர் போலி ஆவணங்களை வைத்து, ரேஷன் வாங்கி கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேஒய்சி இதுவரையில் முடிக்காத பயனாளிகள் உடனே அதை செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் போலியான ரேஷன் கார்டுகள் இருந்தால் அவை உடனடியாக நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், தஞ்சாவூர் மக்களே ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ரேஷன்தாரர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுக்குறித்து தமிழக அரசின் விளக்கம் ஒன்றை தந்துள்ளது. அதில், இது தவறான தகவலாகும். AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர் என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொழில் உரிமம் வழங்கும் விதியில் திருத்தம்.. ஒரே நாளில் உரிமம்.. எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும்?!!