மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். அந்த வகையில் திருவாரூரில் விவசாயிகள் மத்தியில் பேசிய போது திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திமுக அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டதாகவும், இது விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் விமர்சித்தார். தமிழகத்தின் விவசாயப் பகுதிகளுக்கு கூடுதல் நீரை வழங்கி, பாசன வசதிகளை மேம்படுத்தும் என்று எடப்பாடி வலியுறுத்தினார். ஆனால், திமுக அரசு இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். திமுகவின் இந்த அலட்சியம் விவசாயிகளுக்கு எதிரான மனப்பான்மையை காட்டுவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவிரி-கோதாவரி திட்டம் பற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் தெரியாது என விமர்சித்தார். சும்மா எதாவது ஊர் உருவாக போய் பேசிக் கொண்டிருக்க கூடாது கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி எனவும் கூறி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பை பை ஸ்டாலின் என்றும் தெரிவித்து வருகிறார். இது தொடர்பான hashtag சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், பை பை ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், அந்த அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்து விட்டாரா என கேட்டார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு எதுவும் ஆகல.. அவரு நல்லா இருக்காரு.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்..!
விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு நிராகரித்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் பாஜகவோடு கூட்டணியே கிடையாது என்று தமிழக வெற்றிக்கழகம் கூறிவரும் நிலையில், பாஜக வோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவோடு எப்படி கூட்டணி அமைக்கும் என்று கேள்வியும் எழுந்தது. இதனை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன், இபிஎஸ் கடை விரித்தும் யாரும் வரவில்லை என்றும் எனவே பை பை ஸ்டாலின் எனக் கூறக்கூடாது வாங்க சார் என்று தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழனிக்கே பால்காவடி எடுத்தாலும்.. துரைமுருகன் கூட துணை முதல்வராக முடியாது! வாரிசு அரசியலை வெளுத்து வாங்கிய அதிமுக..!