தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. மதுரையில் விமானம் மூலம் வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் சென்றடைந்தார்.
அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை பல இடங்களில் திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது திண்டுக்கல்லின் பெருமையை எடுத்துரைத்தார். திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர் என்றும் ஹைதர் அலியும் திப்புசுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல் எனவும் தெரிவித்தார். தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை என்று கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த பாய்ச்சலுக்கான 8 அறிவிப்புகள்… திண்டுக்கல்லில் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!
இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து வெட்டு இங்கே வந்திருப்பதாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 53 ஆயிரம் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது என்று கூறினார். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால நெல் கொள்முதல் 1.79 கோடி மெட்ரிக் டன் என்று தெரிவித்தார். திமுகவின் 4.5 ஆண்டு கால ஆட்சியில் 19 லட்சம் மெட்ரிக் டன் அதிகளவு கூடுதல் நெல் கொள்வது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 8,984 மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகவும் தெரிவித்தார்
இதையும் படிங்க: அமித் ஷாவா? அவதூறு ஷாவா? கலவர எண்ணம் ஈடேறாது… வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!