ஜனவரி ஆறாம் தேதி மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்த நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ அமைப்புகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். TAMIL NADU ASSURED PENSION SCHEME - TAPS செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 50 சதவீதத்தில் பத்து சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு முன்னதாக கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: திராவிடம் எங்கே இருக்கிறது..? இப்படி பேசியவர் தான் திருமா... இப்ப என்னமோ..! சீமான் காட்டம்...!
அரசு ஊழியர்களின் அடிவயிற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பால் வார்த்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: சனாதன சக்தி துணையோடு திரிபுவாத அரசியல்... விஜயை மறைமுகமாக சாடிய திருமா...!