அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் மே 8ம் தேதி அதிகாரபூர்வமாக போப்பாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் இனி போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சப் போப்பாண்டவர், போப் லியோ XIV, புனித அகஸ்டின் ஆணை ஜெனரலாக இருந்த காலத்தில் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வருகைகள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அகஸ்டினியன் இல்லங்களில் தங்கியுள்ளார்.
இதையும் படிங்க: அவசரக்கான நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்! தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த கடிதம்

2004 ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட முதல் வருகையின் போது, கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மரியபுரம், ஆலுவா மற்றூம் கொச்சி மறைமாவட்டத்தில் உள்ள அகஸ்டீனிய இல்லங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியுள்ளார். மரியபுரத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் உதவி ராணி மேரி திருச்சபையிலும், கொச்சயில் உள்ள புனித அந்தோணி ஆலயத்திலும் புனித திருப்பலியை நடத்தியிருக்கிறார்.

அவரது இரண்டாவது வருகை அக்டோபர் 2006 இல், அக்டோபர் 3 முதல் 6 வரை ஆலுவாவில் நடைபெற்ற புனித அகஸ்தீனிய ஆணை ஆசிய-பசிபிக் கூட்டத்தில் பங்கேற்க மரியபுரத்தில் உள்ள அகஸ்தீனிய இல்லத்திற்கு மீண்டும் வந்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள அகஸ்தீனிய தந்தையர்களால் நடத்தப்படும் பொள்ளாச்சியில் உள்ள செண்பகம் பள்ளிக்கும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில், அவர் தலப்புழாவில் உள்ள செண்பகம் திருச்சபைக்கும் சென்று, கேரளாவின் காலிகட் மறைமாவட்டத்திற்குச் சொந்தமான புனித திருப்பலியை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் இதைச் செய்தே ஆக வேண்டும்: இல்லையென்றால்... இந்தியா இறுதி எச்சரிக்கை..!