முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் தீர்வு கிடைக்காமல் நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் தானே என ராமதாஸ் கூறுகிறார். மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.
இருவருக்கும் இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ராமதாசை செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கினார் ராமதாஸ். இருவருக்கும் இடையிலான பிரச்சினை தீர்வு ஏற்படாமல் நீண்டு வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க தொடங்கிவிட்டன. அன்புமணி ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமானங்கள் கொடுக்கலாம் என அறிவித்தார். அன்புமணி விருப்பமனுக்கள் கொடுக்கலாம் என கூறி இருப்பது தவறான விஷயம் என்றும், பொய்யான விஷயம் என்றும் ஜி.கே. மணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது நடக்கும்னா பாமகவில் இருந்து வெளியேற தயார்… மனம் திறந்த ஜி.கே. மணி…!
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இடம் அன்புமணி விருப்பு மனு வாங்கி வரும் நிலையில் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அந்தக் கிழவனை மிதிச்சு..! ராமதாசை கொல்ல சொல்பவருக்கு அன்புமணி பாராட்டு… ஜி.கே. மணி பகிரங்க குற்றச்சாட்டு…!