கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, 2023 ஆம் ஆண்டு, சூர்யா மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு, விபத்து என்று முதலில் கருதப்பட்டாலும், அவரது தந்தை இதை ஆணவப் படுகொலை என்று குற்றம்சாட்டினார். சூர்யாவின் தந்தை, தனது மகனின் மரணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினரே காரணம் என்று காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், விசாரணையில் உள்ளூர் காவல்துறையின் செயல்பாடு நியாயமாக இல்லை என்று சூர்யாவின் தந்தை முருகன் கருதினார்.
இதையும் படிங்க: அவரை பத்தி பேசுறதே வேஸ்ட்! மல்லை சத்யாவை ரோஸ்ட் செய்த துரை வைகோ
இதன் காரணமாக, அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரினார்.

கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ படுகொலைகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. ஆணவப் கொலைகள் அதிகரித்தாலும் உண்மைகள் வெளி வருவதில்லை என்றும் கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில், நீதியரசர் வேல்முருகன் கூறியது போல, தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
ஆணவ படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் என தெரிவித்தார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிறப்பு சட்டங்களை குறைந்த அளவு கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறினார். தக்க நடவடிக்கை எடுத்தால் தான் ஆணவகொலைகளை நிகழ்த்துவோர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்படும் என்றார்.
இதையும் படிங்க: தீரா பிரச்சனை! திசை திரும்பும் மதிமுக? மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..!