கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த அரசு விழாவுடன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
முதலமைச்சர் விஜய் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோது, எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தவெகவின் ஐடி விங் செந்தில் பாலாஜியின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கரூர் கம்பெனி முதலாளியும், தலைமைக் குடும்பத்திற்கு கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்” என்று செந்தில் பாலாஜியை கேலி செய்து குறிப்பிட்டுள்ளது. அந்தப் பதிவில், செந்தில் பாலாஜி ஒரு ட்வீட் போட்டு உருண்டு புரண்டு, “அய்யோ அம்மா நெஞ்சு வலி” என காரின் கதவை உதைத்துக்கொண்டு கதறியது போன்று நாடகமாடியதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!
“யாரை முதலமைச்சராக்கலாம் என்று பார்த்தபோது அந்தப் பட்டியலில் இவரும் இருந்தார். ஸ்டாலின் சாரால் அன்போடும் பண்போடும், ஊழலற்ற நேர்மைக்காக புகழப்பட்டவர்தான் இவர்” என்று சுட்டிக்காட்டிய தவெக ஐடி விங், “இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு துணிந்துவிட்டார். அதையும் பொதுவெளியில் நேரடியாகக் கேட்காமல், ஒளிந்தபடி ஓடிக்கொண்டே கேட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டது.

மேலும், “வாஷிங் மெஷின் அரசியல் வியாபாரியை திமுக வாங்கி, அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுத்தவர் இவர். டாஸ்மாக் ஊழல் டான் என்று அறியப்பட்ட இவர் இன்று நேர்மையாளர் போல பேசுவது, நரி நடனமாடுவது போன்ற நகைச்சுவையான காட்சியாக உள்ளது” என்று தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
“உண்மையும் நேர்மையும் உண்மையிலேயே இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அந்தத் திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம் இன்று உத்தமர் வேடம் போடுவது எடுபடாது. நாடே இந்த நரித்தந்திர நாயகரையும், ஊழல் உத்தமரையும் பார்த்து சிரிக்கிறது” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.கவினர் செந்தில் பாலாஜியின் கடந்தகால செயல்பாடுகளை மீண்டும் சுட்டிக்காட்டி, தற்போதைய அவரது விமர்சனங்களை ஏளனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இரு கட்சிகளுக்கும் இடையே மேலும் மோதலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!